கேரளாவில் தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி - ப்ளாக் மெய்ல் செய்த சகோதரர்

சிறுமியின் பலாத்கார காட்சிகள் அடங்கிய வீடியோவை வைத்துக் கொண்டு அவரை சகோதரர் ப்ளாக் மெய்ல் செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

கேரளாவில் தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி - ப்ளாக் மெய்ல்  செய்த சகோதரர்

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kannur:

கேரளாவில் தந்தை உள்பட சிலரால் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. 

கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்குத்தான் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. அவரது தாயார் அளித்த புகாரின்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த சிறுமி பலமுறை பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.  சிறுமியின் தந்தையும், அவரது நண்பர்களும் சேர்ந்து பலமுறை இந்த சிறுமியை நாசம் செய்திருக்கின்றனர். சிறுமிக்கு சோசியல்  மீடியா மூலம் ஒரு  ஆண் நண்பர் கிடைத்திருக்கிறார். அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து சிறுமியிடம் பலமுறை வல்லுறவு  வைத்திருப்பதாக போலீசார்  தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Newsbeep

இந்த விவகாரம் குறித்து சிறுமியின் தாயாருக்கு முன்னர் விவரம் ஏதும் தெரியவில்லை. ஒருமுறை சிறுமியின் பலாத்கார வீடியோவை வைத்துக் கொண்டு அவரது சகோதரர் சிறுமியை பிளாக் மெய்ல்  செய்துள்ளார். 

இதனைப்பார்த்த பிறகுதான் அவரது தாயாருக்கு நடந்த சம்பவங்கள் குறித்து தெரியவந்தது. இதன்பின்னர் அவர் போலீசில்  புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.