பாஜகவுக்கு ஆதரவு...? அடிப்படை ஆதாரமற்ற செய்தி :குமாரசாமி ட்வீட்

குமாரசாமி தயார் செய்த மாநில பட்ஜெட் அறிக்கை நல்லவிதமாகத் தாக்கல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஜி.டி தேவகவுடா அப்படிப் பேசியிருப்பார்” என பி.டி.ஐ ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

குமாரசாமியின் அரசு கடந்த வாரம் சரிந்தது.

Bengaluru:

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதால் சரிந்தது. இந்நிலையில் குமாராசாமி பாஜகவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக என்று வந்த செய்தியை மறுத்துள்ளார்.

இந்நிலையில் குமாரசாமி “நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோன் என்ற செய்தி என்  கவனத்திற்கு வந்தது. செய்தி அடிப்படை ஆதாரமற்றது. கட்சியில் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இந்த வதந்திகளை நம்பக்கூடாது.இது உண்மைக்கு புறம்பானது. நாங்கள் தொடர்ச்சியாக மக்களுக்காக போராடுவோம் வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஹெச்.டி தேவகவுடா, ``ஜி.டி தேவகவுடா கூறிய கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியான நாங்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படவுள்ளோம். எந்த இடத்தில் எதிர்க்க வேண்டுமோ அங்கு நிச்சயமாக எதிர்ப்போம். நீங்கள் (எடியூரப்பா) மாநிலத்துக்கு ஏதேனும் நல்லது செய்தால் அதை நாங்கள் வரவேற்போம். அதைத் தவிர எங்களுக்கு பா.ஜ.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குமாரசாமி தயார் செய்த மாநில பட்ஜெட் அறிக்கை நல்லவிதமாகத் தாக்கல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஜி.டி தேவகவுடா அப்படிப் பேசியிருப்பார்” என பி.டி.ஐ ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சராக எடியூரப்ப பதவியேற்ற நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தன் பெரும்பான்மையை நிரூபிப்பார்.

More News