100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: எடியூரப்பா நம்பிக்கை!

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: எடியூரப்பா நம்பிக்கை!

100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன்


Bengaluru: 

ஹைலைட்ஸ்

  1. Karnataka Chief Minister BS confident of proving majority in the house
  2. Speaker Ramesh Kumar disqualifies 14 more Congress-JDS rebel lawmakers
  3. Disqualifications will not have any direct impact on the trust vote today

கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், '100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன்' என கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமையன்று புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்ட எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு  சட்டமன்றத்தில் இன்று அதன் பெரும்பான்மையை நிரூபிக்க  உள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 11 எம்.எல்.ஏ.க்களையும், மஜத கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த 22-ந் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரி காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பில் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

அதை பரிசீலித்த சபாநாயகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமட்டள்ளி, சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசில் சேர்ந்த சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் கடந்த 25-ந் தேதி தகுதி நீக்கம் செய்தார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கர்நாடகத்தில் புதிய அரசு அமைக்க பாஜக முன்வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா 26-ந் தேதி முதல்வராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து, இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 224. இவர்களில் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதால், தற்போது சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 207.

இதில், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு குறைந்தபட்சம் 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................