கறுப்பர் கூட்டத்துக்கும், திமுக கூட்டத்துக்கும் தமிழகத்தில் இடமில்லை; எல்.முருகன் ஆவேசம்

'ஆன்மீக பூமியில் திமுக, கறுப்பர் கூட்டத்துக்கு இடம் கிடையாது என்பதை காவி கூட்டம் நிரூபிக்கும்'

கறுப்பர் கூட்டத்துக்கும், திமுக கூட்டத்துக்கும் தமிழகத்தில் இடமில்லை; எல்.முருகன் ஆவேசம்

தமிழகத்தில் எத்தனை கறுப்பர் கூட்டம், திமுக கூட்டம் வந்தாலும் அவர்களுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு தெற்கு மாவட்டம் பாஜக செயல் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் கலந்து கொண்டு பேசியதாவது, 'இன்னும் எத்தனை கறுப்பர் கூட்டம் வந்தாலும், எத்தனை திராவிட முன்னேற்ற கழக கூட்டம் வந்தாலும், அவர்களுக்கு தமிழகத்தில், ஆன்மீக பூமியில் இடம் கிடையாது என்பதை காவி கூட்டம் நிரூபிக்கும்' இவ்வாறு பேசினார்.