This Article is From Nov 27, 2019

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி 47 ராக்கெட்

ISRO launch: அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

ISRO: இந்த செயற்கைக்கோள் 1,625 கிலோ எடை கொண்டது.

New Delhi:

'கார்ட்டோசாட் - 3' என்ற செயற்கைக்கோளை, 'பி.எஸ்.எல்.வி. - சி46' ராக்கெட் உதவியுடன், 'இஸ்ரோ'  இன்று காலை விண்ணில் செலுத்தியது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கோள்களை ஏவிய மைல்கல்லை எட்டியது. 

நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ. தற்போது ராணுவ ஆய்வுகளுக்கு உதவுவதற்காக 'கார்ட்டோசாட் - 3' செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதனுடன் அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 

1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து 509 கி.மீ., தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும். இது துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டதாகும்.

.