This Article is From Jul 20, 2019

தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

தமிழகத்தில் நெல்லை, மதுரை, தேனி உள்பட 14 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

மதுரையில் குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

New Delhi:

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாக தமிழகத்தை சேர்ந்த 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 14 பேர் இல்லங்களிலும் சென்னை, மதுரை, தேனி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்த வருகிறது. 

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

t2mpfjgo

கடந்த 2 மாதங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களிலும் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். கடந்த வாரம் சென்னை மண்னடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு 6 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களை ஜூலை 26 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையை அடுத்து, நாகப்பட்டிணத்தில் ஹரிஷ் முகமது மற்றும் ஹாசன் அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

.