This Article is From Dec 10, 2018

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை சுறுசுறுப்பற்ற‌வர் என்று விமர்சித்த ட்ரம்ப்!

''அதிபர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, சட்ட விதிமுறைகளை மீறி வருகிறார்'' ரெக்ஸ் டைலெர்ஸன்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை சுறுசுறுப்பற்ற‌வர் என்று விமர்சித்த ட்ரம்ப்!

நாட்டின் 69வது வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ரெக்ஸ் டைலெர்ஸன்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.  முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டைலெர்ஸன் ''கல்லை போன்றவர்'' மற்றும் ''ஆகச்சிறந்த சோம்பேறி'' என்று விமர்சித்து ட்விட் செய்துள்ளார். 

இதற்கு காரணம் சமீபத்திய  பேட்டியில் ரெக்ஸ் டைலெர்ஸன் ''அதிபர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, சட்ட விதிமுறைகளை மீறி வருகிறார்'' என்று குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு ட்விட் மூலம் பதிலளித்துள்ள ட்ரம்ப் '' மைக் ஃபேம்பியோ அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவரை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. ஆனால் இவருக்கு முன் இந்த வேலையில் இருந்த ரெக்ஸ் டைலெர்ஸன் ''கல்லைப்போன்று அசையாதவர், அவரை நான் எப்போதுமே சுறுசுறுப்பாக பார்த்ததில்லை. ஒரு ஆகச்சிறந்த சோம்பேறி அவர்'' என்று கூறியுள்ளார்.

ரெக்ஸ் டைலெர்ஸனை ட்ரம்ப் கடந்த மார்ச் மாதம் வடகொரியா, ரஷ்யா மற்றும் ஈரான் கொள்கைகளில் ஏற்பட்ட முரண் காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை ரெக்ஸ் டைலெர்ஸன்  தனிப்பட்ட முறையில் தன் நண்பர்களிடம் ட்ரம்ப்பை ஒரு முட்டாள் என்று கூறியிருக்கிறார்.

ரெக்ஸ் டைலெர்ஸன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் '' ட்ரம்ப் ஒரு நாகரீகமற்றவர், படிக்க விரும்பாதவர், எந்த அறிக்கை மற்றும் தகவலை படிக்க விரும்பாதாவ்ர், மற்றவர்கள் படித்து சொல்வதையையும் கேட்காதவர். நான் அவரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். அதிபரே, நீங்கள் செய்வது தவறு, அது சட்ட விதிமுறைகளை மீறும் செயலாக இருக்கும்'' என்று கூறியுள்ளதாக கூறினார். 

நாட்டின் 69வது வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ரெக்ஸ் டைலெர்ஸன். அவரது அனுபவம் என்பது அவரது பதவிக்கு ஏற்ற சிற‌ந்த விஷயமாக உள்ளது. ட்ரம்ப் தனது அதிகாரிகளை தனது வசதிக்கு ஏற்றவாறு அமைத்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.