This Article is From Mar 24, 2020

நாடு முழுவதும் முடக்கம்: மணிப்பூரில் முதல் கொரோனா பாதிப்பு!

Coronavirus India: கொரோனா அச்சுறுத்தல் குறித்து இன்று நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

நாடு முழுவதும் முடக்கம்: மணிப்பூரில் முதல் கொரோனா பாதிப்பு!

Coronavirus India: கொரோனா பாதிக்கப்பட்ட அந்த மணிப்பூர் பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மணிப்பூரில் முதல் கொரோனா பாதிப்பு!
  • மணிப்பூர் பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
  • 32 மாநிலங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.
Imphal:

மணிப்பூரில் முதன் முதலாக 23 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த பெண் லண்டன் சென்று திரும்பியவர் என்று தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் 560 மாவட்டங்களை உள்ளடக்கிய 32 மாநிலங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 496 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக சர்வதேச விமானங்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவைகள் மார்ச்.31ம் தேதி வரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதித்து கடுமையாக கட்டுபாடுகளை அமல்படுத்தியது. அத்தோடு, இந்த கட்டுபாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. 

இதைத்தொடர்ந்து, தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மணிப்பூர் பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களையும் அதிகாரிகள் கண்டறிநது வருகின்றனர்.

முழு வடகிழக்கு பகுதியும் முடக்கப்பட்டிருப்பதால், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலிருந்து வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கவலை கொண்டுள்ளன, அங்கு ஏராளமான கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

இதனிடையே, கொல்கத்தாவில், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த 57 வயது நபருக்கு எந்த ஒரு வெளிநாட்டு பயண பின்னணியும் இல்லாதது, வைரஸ் பரவும் சங்கிலி குறித்து கவலை எழுப்பியுள்ளது. 

பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதித்து கடுமையாக கட்டுபாடுகளை அமல்படுத்தியது. அத்தோடு, இந்த கட்டுபாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

மிசோரம், சிக்கிம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே இன்னும் தடையுத்தரவை அமல்படுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவை பலரும் முக்கியமானதாக கருதவில்லை என்று வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், கட்டுபாடுகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக சர்வதேச விமானங்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உள்நாட்டு விமான சேவைக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

மூக விலகலை அமல்படுத்தும் முயற்சியில் மெட்ரோ சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன, இதுவே வைரஸைத் தடுப்பதற்கான ஒரே வழி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எந்தவொரு தகவலும் உண்மைகளை அறியாமல் பரப்புவதற்கு எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது அமைப்போ அச்சு, மின்னணு அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

.