This Article is From Jul 04, 2019

’ஒரு சிலருக்கே இந்த தைரியம் இருக்கிறது’: ராகுல் ராஜினாமா குறித்து பிரியங்கா காந்தி.!!

தனது ராஜினாமா குறித்து ஒரு நீண்ட விளக்க கடிதத்தை நேற்று இரவு ராகுல் வெளியிட்ட நிலையில், அவரது சகோதரி பிரியங்கா காந்தி இதுகுறித்து ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

’ஒரு சிலருக்கே இந்த தைரியம் இருக்கிறது’: ராகுல் ராஜினாமா குறித்து பிரியங்கா காந்தி.!!

ராகுலின் ராஜினாமா முடிவு குறித்து பிரியங்கா ட்விட்

New Delhi:

மக்களவை தேர்தலில் ஏற்ப்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, நேற்று இரவு ஒரு நீண்ட விளக்க கடிதத்தை ராகுல் வெளியிட்டிருந்தார்.

இந்த விளக்க கடிதம் வெளியான மறுநாளான இன்று இதுகுறித்து ராகுலின் சகோதரி பிரியங்கா, 'ஒரு சிலருக்கே உங்களை போன்று இந்த தைரியம் இருக்கிறது' என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற ராகுல் காந்தி, அண்மையில் நடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கடந்த மே 25ம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ராகுல் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, கட்சியின் மூத்தத் தலைவர்களும், தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் ராகுல் தனது முடிவில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தாம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார்.

இதையடுத்து, தனது ராஜினாமா குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ளார். அதில், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தான் விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கட்சியின் அடுத்த தலைவர் தான் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது என்றும், காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்விக்கு மேலும் பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது எனவும், எதிர்கால காங்கிரஸ் வளர்ச்சிக்கு தனது ராஜினாமா முக்கிய பங்காற்றும் எனக்கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், 'ஒரு சிலருக்கே உங்களை போன்று இந்த தைரியம் இருக்கிறது' என்று அவர் கூறியுள்ளார். மேலும், உங்கள் முடிவுகளுக்கு மரியாதைகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

.