This Article is From Jun 09, 2020

‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரானா பாதிப்பு இல்லை’ – பரிசோதனையில் தகவல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2 நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் தகவல்கள் வந்தன.

‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரானா பாதிப்பு இல்லை’ – பரிசோதனையில் தகவல்

பரிசோதனை முடிவால் ஆம் ஆத்மி தொண்டர்களும், கெஜ்ரிவால் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு
  • இன்று காலையில் முதல்வருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
  • கொரோனா தொற்று முதல்வருக்கு இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது
New Delhi:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2 நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் தகவல்கள் வந்தன. விரைவில் அவர் கொரோனா வைரஸ் சோதனையையும் எடுத்துக் கொள்ள இருக்கிறார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது.

நேற்று முன்தினம் முதலே கெஜ்ரிவால் யாரையும் சந்திக்கவில்லை என்றும், டெல்லி முதல்வர் இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதன் தொடர்ச்சியாக இன்று கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலைக்கு செல்லவில்லை என்று கூறியுள்ள அரசு, கொரோனா பாதித்தவர்களில் பாதிப்பேருக்கு எப்படி ஏற்பட்டது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அளித்த பேட்டியில், ‘டெல்லியில் சமூக பரவல் ஏற்படவில்லை. இதனை மத்திய சிறப்பு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்' என்று கூறியுள்ளார். முன்னதாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளும், டெல்லி அமைச்சர்களும் கொரோனா தடுப்பு தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பல பேருக்கு தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டோம் என்றே தெரியவில்லை. டெல்லியில் கொரோனா பாதித்த பாதிப்பேருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார்.

சமூக பரவல் என்பது, கொரோனா பாதிப்பின் மூன்றாவது நிலை என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைக்கு வந்துவிட்டால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது மிக கடினமாக மாறி விடும்.

.