This Article is From Jul 27, 2020

டெல்லியில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு; கெஜ்ரிவால் பெருமிதம்

தொடர்ந்து, 9 சதவீத பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு; கெஜ்ரிவால் பெருமிதம்

டெல்லியில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு; கெஜ்ரிவால் பெருமிதம். (File photo)

New Delhi:

தலைநகர் டெல்லியில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து, 9 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனனர் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, டெல்லியில் கொரோனா நிலைமை முன்னேறி வருகிறது. இந்தியா முழுவதும் டெல்லி மாடல் பேசப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தின் படி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 88 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து, 9 சதவீத பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 முதல் 3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 

கொரோனா தொடர்பான மரணங்கள் டெல்லியில் குறைந்து வருவதாகவும், புதிதாக பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும், 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் தினமும் 100 பேர் வரை உயிரிழந்து வந்தனர். முன்னதாக, 100 பேரில், 35 பேருக்கு பாதிப்பு உறுதியாகி வந்தது. ஆனால், இன்று 100 பேரில், 5 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகிறது. 

தற்போது, 15,500 படுக்கை வசதிகள் உள்ளன. 2,800 பேர் மட்டுமே சகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், 12,500 படுக்கைகள் காலியாக உள்ளன. எனினும், மக்கள் தொடர்ந்து, முகக்கசவம் அணிந்த செல்வது, உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் தொடர்ந்து, 2வது லாக்டவுனை அமல்படுத்த வேண்டிய தேவையில்லை. மற்ற மாநிலங்களில் இரண்டு, மூன்று நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். 

அடுத்த கட்டமாக, மீண்டும் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசு, தொழிலதிபர்கள் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். 

.