This Article is From Jun 12, 2020

டெல்லியில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்: உச்ச நீதிமன்றம்

சென்னை மற்றும் மும்பை மாநிலங்கள் தங்கள் சோதனை எண்ணிக்கையை 16,000 முதல் 17,000 ஆக உயர்த்தியபோது டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை 7,000ல் இருந்து 5,000 ஆக குறைந்துவிட்டது ஏன்?

டெல்லியில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்: உச்ச நீதிமன்றம்

டெல்லியில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்: உச்ச நீதிமன்றம்

New Delhi:

டெல்லியில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர் என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 

தேசிய தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனா நோயாளிகள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டு வருகின்றனர். நோய் பாதித்தவரின் உடல் குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்படுகிறது. நோயாளிகள் இறந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாரும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பரிசோதனைகள் குறைக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க கெஜ்ரிவால் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை மற்றும் மும்பை மாநிலங்கள் தங்கள் சோதனை எண்ணிக்கையை 16,000 முதல் 17,000 ஆக உயர்த்தியபோது டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை 7,000ல் இருந்து 5,000 ஆக குறைந்துவிட்டது ஏன்? "என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்திற்கு அடுத்தப்படியாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ள மூன்றாவது மாநிலமாக டெல்லி உள்ளது. அங்கு இதுவரை 34,687 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,085 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, வரும் ஜூலை 31ம் தேதிக்குள் 5.5 லட்சம் பேர் வரை வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரும் என்று அரசு எதிர்பார்ப்பதாகவும், தொற்றுநோய்களின் எண்ணிக்கையை சமாளிக்க நகரம் தயாராக இருப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்நிலையில், தொற்றுநோயை கையாளும் விதம் குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது குறித்தும் ஆம் ஆத்மி அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. டெல்லியில் நிலைமை கொடூரமானது, பரிதாபகரமானது. டெல்லி மருத்துவமனைகளில் மிகவும் வருந்தத்தக்க நிலைமை உள்ளது. அங்கு உடல்களுக்கு உரிய கவனிப்பும், அக்கறையும் கொடுக்கப்படுவதில்லை. நோயாளிகளின் குடும்பத்தினருக்கு உயிரிழப்புகள் குறித்து கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், சில சந்தர்பங்களில் நோயாளிகளின் குடும்பங்கள் கடைசி சடங்குகளில் கூட கலந்துகொள்ள முடியவில்லை. 

கிடைத்த சில தகவல்களின்படி, டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் பகுதியில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

அதேபோல், டெல்லி தவிர்த்து, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திலும் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தான் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து, இந்த விவகாரம் அடுத்த வாரம் விசாரிக்கப்பட உள்ளது. 

திங்கட்கிழமையன்று, முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உடல்கள் கையாளப்படும் முறையை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர்,  "கண்ணியத்துடன் இறப்பது என்பது ஒரு அடிப்படை உரிமை என்றும், அது ஒரு நல்ல அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான உரிமையை உள்ளடக்கியது" என்று அவர் தனது கடிதத்தில் புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்த சமீபத்திய சம்பவங்கள் உட்பட பல ஊடக அறிக்கைகளை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

.