This Article is From Apr 10, 2020

வேகமெடுக்கும் கொரோனா… பரிசோதனை முறையில் மாற்றம் செய்யும் அரசு… எப்படி செயல்படும்?

கொரோனா விஸ்வரூபம் எடுத்ததிலிருந்தே, பல மருத்துவ வல்லுநர்கள், சோதனை செய்யும் அளவை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

வேகமெடுக்கும் கொரோனா… பரிசோதனை முறையில் மாற்றம் செய்யும் அரசு… எப்படி செயல்படும்?

ஏப்ரல் 8 ஆம் தேதி வரை, மொத்தமுள்ள 133 கோடி மக்களில் 1.27 லட்சம் பேருக்கு மட்டும்தான் அரசு, கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் 'ஹாட்ஸ்பாட்டுகள்' கண்டறியப்பட்டுள்ளன
  • இந்த ஹாட்ஸ்பாட்டுகளில் சோதனை அளவு உயர்த்தப்பட்டுள்ளது
  • 5 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டது
New Delhi:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவியவர்களை அடையாளம் காணும் நோக்கில், பரிசோதனை முறையில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம், கொரோனா அதிகமாக பரவும் இடங்கள் அடையாளம் காணப்படும். இந்த ‘ஹாட்ஸ்பாட்ஸ்களில்' உள்ள நபர்கள் கொரோனா தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலே, அவர்களை ஒரு வார காலத்துக்கு சோதனை செய்ய உள்ளது அரசு. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த புதிய சோதனை முறை அமலுக்கு வந்துள்ளது. 

கடந்த 20 நாட்களாக 5 பிரிவுகளைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே கொரோனா வரைஸுக்காக பரிசோதனை செய்யப்பட்டார்கள். 

கடந்த 14 நாட்களில் கொரோனா அறிகுறிகளுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து திரும்பியவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் உள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள், சுவாசக் கோளாறு பிரச்னை கொண்ட நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டப் பிரிவினருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டு வந்தது. 

தற்போது, ‘ஹாட்ஸ்பாட்களில்' உள்ள நபர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி மற்றும் மூக்கு ஒழுகுதல் குறைபாடுகள் இருக்குமேயானால் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. 

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு, கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல் செய்யப்பட்டிருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், இந்த பரிசோதனை மாற்ற யுக்தி கையிலெடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள், கொரோனாவைத் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தாக்கம் மற்றும் சாகுபடி காலம் நெருங்கி வருவதால், ‘ஹாட்ஸ்பாட்களை' மட்டும் சீல் செய்துவிட்டு, மற்ற இடங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 

இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்ததிலிருந்தே, பல மருத்துவ வல்லுநர்கள், சோதனை செய்யும் அளவை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்தியாவிடம் அந்தளவுக்கு பரிசோதனைக் கருவிகள் இல்லாத காரணத்தினால், அதை இதுவரை செய்ய முடியவில்லை. ஏப்ரல் 8 ஆம் தேதி வரை, மொத்தமுள்ள 133 கோடி மக்களில் 1.27 லட்சம் பேருக்கு மட்டும்தான் அரசு, கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. 

.