This Article is From Jul 09, 2020

'கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்' - ராம்நாத் கோவிந்த்

நியூசிலாந்து தூதர் டேவிட் பைன், இங்கிலாந்து  தூதர் சர் பிலிப் பார்ட்டோன், உஸ்பெகிஸ்தான் தூதர் அகதோவ் டில்சாத் காமிடோவிக் ஆகியோர் தாங்கள் தூதர்களாக நியமிக்கப்பட்டதற்கான பிரமாண  பத்திரத்தை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தனர்.

'கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்' - ராம்நாத் கோவிந்த்

புதிய தூதர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.

New Delhi:

கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார். 

நியூசிலாந்து, இங்கிலாந்து, உஸ்பெகிஸ்தான் நாடுகளின் தூதர்கள், தங்களது பிரமாண பத்திரத்தை குடியரசு தலைவரிடம் அளித்து ஒப்புதல் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாவது-

நியூசிலாந்து, இங்கிலாந்து, உஸ்பெகிஸ்தான் நாடுகளுடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. சர்வதேச விவகாரங்களில் இந்தியா எப்போதும் முழு ஒத்துழைப்புடன் செயல்படும். 

தற்போது கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவது அவசியம். 

உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா முன்னணியில் நின்று போராடி வருவதை பார்க்கலாம். 2021 - 22ம் ஆண்டுக்கான ஐ.நா.  பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் என்ற அடிப்படையில்  சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்காக இந்தியா தொடர்ந்து  பாடுபடும். 

இவ்வாறு  அவர் தெரிவித்தார்.  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த  நிகழ்வு வீடியோ கான்பரன்சிங்  முறையில் நடைபெற்றது. 

நியூசிலாந்து தூதர் டேவிட் பைன், இங்கிலாந்து  தூதர் சர் பிலிப் பார்ட்டோன், உஸ்பெகிஸ்தான் தூதர் அகதோவ் டில்சாத் காமிடோவிக் ஆகியோர் தாங்கள் தூதர்களாக நியமிக்கப்பட்டதற்கான பிரமாண  பத்திரத்தை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய தூதர்களை வாழ்த்தினார். 

.