This Article is From Nov 23, 2018

சீனாவில் பள்ளி குழந்தைகளை இடித்துத் தள்ளிய கார் - 5 பேர் உயிரிழப்பு

காரின் டிரைவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது

சீனாவில் பள்ளி குழந்தைகளை இடித்துத் தள்ளிய கார் - 5 பேர் உயிரிழப்பு

பள்ளிக் குழந்தைகள் மீது கார் ஏறியது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Beijing:

சீனாவில் பள்ளிக் குழந்தைகள் மீது கார் ஒன்று ஏறியதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சினாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் ஹுலுடாவ் என்ற நகரம் உள்ளது. இங்குள்ள பள்ளி ஒன்றின் அருகே குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த கார் ஒன்று குழந்தைகள் மீது மோதிச் சென்றது.

தவறான பாதையில் வந்த கார், குழந்தைகள் மீது ஏறி அவர்களை நசுக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உயிரிழந்தவர்களின் வயது குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.