சைக்கிள் மீது கார் மோதியதால் காருக்கு ஏற்பட்ட சேதம்!

கமென்டுகளில் ஒருவர் ‘நோக்கியா நிறுவனம் தற்போது சைக்கிள்களை தயாரிக்க தொடங்கிவிட்டனரா? என கேள்வி எழுப்பினார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
சைக்கிள் மீது கார் மோதியதால் காருக்கு ஏற்பட்ட சேதம்!

சீனாவில் உள்ள ஷின்ஜென் நகரில் நடந்தது.


ஆம் நீங்கள் தலைப்பில் படித்தது சரிதான். சீனாவில் மிகவும் வைரல் ஆகி வரும் இந்த புகைப்படத்தில் காருடன் ஒரு சைக்கிள் மோதி இருக்கிறது.  அதிர்ச்சி தரும் வகையில் அந்த காரின் பம்பரில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் இவ்வளவு பெரிய மோதலுக்கு பின்னர் அந்த சைக்களிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.


அந்த ஆச்சரியமான வீடியோ காட்சிகள் இங்கே:

மேலும் எதிர்பார்த்தபடி இந்த வீடியோ காட்சியை பார்த்து பலர் சிரித்து வரும் நிலையில், கமென்டுகளில் ஒருவர் ‘நோக்கியா நிறுவனம் தற்போது சைக்கிள்களை தயாரிக்க தொடங்கிவிட்டனரா? என கேள்வி எழுப்பினார், மேலும் மற்ற ஒரு நபர் ‘எனக்கு இந்த வண்டி வேண்டும்' என்று கமெண்டு செய்திருந்தார்.


இந்த புகைப்படத்தைச் சிலர் போலி என்று பலர் கேள்வி எழுப்பிய நிலையில், அங்குள்ள போலீசார் அச்சம்பவத்தை நிஜம் தான் என்று விளக்கினர். மேலும் இச்சம்பவத்தால் யாருக்கும் அடிபடவில்லை என்ற செய்தி மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................