This Article is From Jul 30, 2020

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: மதகுரு ஒருவர் மற்றும் 16 காவலர்களுக்கு கொரோனா!!

எவ்வாறாயினும் இந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தற்போது 29,997 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 375 பேர் அயோத்தியை சேர்ந்தவர்களாவார்கள்.

ராமர் கோயிலின் தலைமை மதகுருவின் உதவியாளருக்கு கொரோனா!

ஹைலைட்ஸ்

  • அயோத்தியில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5 அன்று நடைபெற உள்ளது
  • , ராமர் கோயிலின் தலைமை மதகுருவின் உதவியாளரான பிரதீப் தாசுக்கு கொரோனா
  • உத்தரப் பிரதேசத்தில் தற்போது 29,997 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5 அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 50 முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த16 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ராமர் கோயிலின் தலைமை மதகுருவின் உதவியாளரான பிரதீப் தாசுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தற்போது 29,997 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 375 பேர் அயோத்தியை சேர்ந்தவர்களாவார்கள்.

இந்த நிகழ்வில் மதகுருக்கள், பாதுகாப்பு வீரர்கள், விருந்தினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என பலர் கலந்துக்கொள்வார்கள்.

ராம ஜன்மபூமி தளத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் பிரதமருக்கு ஹெலிபேட் உட்பட பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கான பாதை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ராமர் வாழ்க்கையை சித்தரிக்கும் கிராஃபிட்டி ஓவியங்கள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன.

அயோத்தி முழுவதும் ராட்சத சி.சி.டி.வி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன, எனவே பக்தர்கள் இந்த நிகழ்ச்சியைக் காணலாம் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த விழாவிற்கு கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய அனைத்து மூத்த பாஜக தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதில் லால் கிருஷ்ணா அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி, வினய் கட்டியார் மற்றும் சாத்வி ரித்தாம்பரா போன்ற மூத்த தலைவர்கள் உள்ளனர். மேலும், பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் மூத்தவர்களும், அதன் தலைவர் மோகன் பகவத் உட்பட, இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.