This Article is From Aug 06, 2020

வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகி இருக்க பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுறுத்தல்!

இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும்

வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகி இருக்க பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுறுத்தல்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பாகிஸ்தான் நேற்று விமர்சித்திருந்தது

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 20 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநில அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளி செங்கல் வைத்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவது குறித்து பாகிஸ்தான் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தது. பாகிஸ்தானின் விமர்சனத்தை இந்தியா இன்று கடுமையாக நிராகரித்ததுடன், பாகிஸ்தானை "வகுப்புவாத தூண்டுதலிலிருந்து" விலகியிருக்குமாறு கேட்டுக் கொண்டது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவாவும் இந்தியாவின் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் செய்தி அறிக்கையை இந்தியாவுக்கு உட்பட்ட ஒரு விசயத்தில் நாங்கள் கண்டிருக்கிறோம். பாகிஸ்தான் இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், வகுப்புவாத தூண்டுதலிலிருந்து அது விலகி இருக்க வேண்டும்.” என்றும்,

“இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் அதன் சொந்த சிறுபான்மையினரின் மத உரிமைகளை மறுக்கும் ஒரு தேசத்தின் ஆச்சரியமான நிலைப்பாடு அல்ல என்றாலும், இதுபோன்ற கருத்துக்கள் ஆழ்ந்த வருந்தத்தக்கவை.” என்றும் அனுராக் கூறியுள்ளார்.

முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பாகிஸ்தான் நேற்று விமர்சித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.