ஜெய்ஷ்-இ-முகமது விஷயத்தில் முரணாக கருத்துகூறும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, ஜெய்ஷ் இ முகமதின் தலைவர் உயிரோடு இருப்பதாக தகவல் வெளியிட்டார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜெய்ஷ்-இ-முகமது விஷயத்தில் முரணாக கருத்துகூறும் பாகிஸ்தான்!

கடந்த 50 வருடங்களில் இரு நாடுகளுக்கு இடையேயான முதல் வான்வழி தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, ஜெய்ஷ் இ முகமதின் தலைவர் உயிரோடு இருப்பதாக தகவல் வெளியிட்டார். புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது, தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவப்படையினரை கொன்றது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்தியா ஜெய்ஷ் இ முகமது தளவாடங்களை நோக்கி தாக்குதல் நடத்தியது. கடந்த 50 வருடங்களில் இரு நாடுகளுக்கு இடையேயான முதல் வான்வழி தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச செய்திகளில் குரேஷி, "இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது காரணமில்லை. மற்றும் அதன் தலைவர் மசூர் ஆஸாத் காரணமில்லை. 2008 மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய மசூத் ஆஸார் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி" என்றார். தற்போது அவர் உயிரோடு இருப்பதாகவும், சற்று உடல்நலக்குறைவோடு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் மூத்த ராணுவ செய்தி தொடர்பாளர் அசிஃப் கஃபோர் கூறுகையில், "ஜெய்ஷ் இ முகமது தான் தாக்குதலை நடத்தியது ஆனால் பாகிஸ்தானிலிருந்து நடத்தவில்லை" என்றார். 

மேலும், "ஜெய்ஷ் இ முகமது பாகிஸ்தானில் முற்றிலுமாக இல்லை. இதனை ஐநாவும் பாகிஸ்தானுமே கூறியுள்ளது. யாருடைய அழுத்ததுக்கும் நாங்கள் செவி சாய்க்கமாட்டோம்" என்றார்.

"இந்தியா, வான்வழி தாக்குதலை விதிகளை மீறி நடத்தியதாலேயே அவர்களை திருப்பி தாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இரு நாடுகளும் அமைதியை நிலைநாட்ட எல்லைக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய தாக்குதலுக்கு பிறகு நாங்கள் எங்களை பலப்படுத்தியுள்ளோம்" என்றார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................