அபினந்தன் விடுதலைக்கு முன்னர் வீடியோ வெளியிட்ட பாக். அரசு!

அபினந்தன் விடுதலைக்கு சில மணி துளிகளுக்கு முன்னர் பாகிஸ்தான் ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 

அபினந்தன் விடுதலைக்கு முன்னர் வீடியோ வெளியிட்ட பாக். அரசு!

நேற்று மாலையே அபினந்தன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில ஆவண சரிபார்ப்புகள் காரணமாக அவரை ஒப்படைப்பது தள்ளிப் போனது. 

New Delhi:

பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை போர் விமானி அபினந்தன் வர்தமன், நேற்று இரவு வாகா எல்லையில் பாகிஸ்தானால் ஒப்படைக்கப்பட்டார். அவர் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் பாகிஸ்தான் அரசு தரப்பு, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விங் கமாண்டர் அபினந்தன் பேசியுள்ளார். 

நேற்று மாலையே அபினந்தன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில ஆவண சரிபார்ப்புகள் காரணமாக அவரை ஒப்படைப்பது தள்ளிப் போனது. 

அபினந்தனை பாகிஸ்தான் தரப்பு ஒப்படைப்பதற்கு முன்னர்தான் அந்த வீடியோவை ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ, அபினந்தன் விடுதலைக்கு சில மணி துளிகளுக்கு முன்னர் பாகிஸ்தான் ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 

வீடியோவில் விங் கமாண்டர் அபினந்தன், ‘எல்லை கட்டுப்பாட்டை மீறி, பாகிஸ்தானில் நுழைந்தது ஒரு இலக்கை கண்டுபிடிக்கத்தான். பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் தரையிறங்கிய பின்னர், என்னைத் தாக்கிய கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம்தான் என்னை காப்பாற்றியது. பாகிஸ்தான் ராணுவம் மிகவும் தொழில் நேர்த்தியுடன் நடந்து கொண்டது. நான் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்' என்று பேசியுள்ளார். அந்த வீடியோ பல இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 15 வெட்டுகளாக அந்த வீடியோவில் இருந்தது. 

கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது. இதையடுத்து, அவரை அந்நாட்டு அரசு, நேற்று இரவு 9:20 மணி அளவில் இந்தியாவிடம் ஒப்படைத்தது. 

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், சென்ற புதன் கிழமை வான் வழி சண்டையில் ஈடுபட்டன. அதில்தான் அபினந்தன், பாகிஸ்தான் தரப்பிடம் சிக்கினார். இதையடுத்து பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அபினந்தனை நாங்கள் விடுவிக்கிறோம்' என்று பேசினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற சூழல் சற்றுத் தணிந்துள்ளது. 

 

மேலும் படிக்க - 'திரும்ப வந்தது மகிழ்ச்சி!'- தாயகம் திரும்பியது குறித்து விமானி அபினந்தன் வர்தமன்

More News