'திரும்ப வந்தது மகிழ்ச்சி!'- தாயகம் திரும்பியது குறித்து விமானி அபினந்தன் வர்தமன்

IAF Pilot: இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமன் வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

விங் கமாண்டர் அபினந்தனர் பாகிஸ்தானால் புதனன்று சிறைவைக்கப்பட்டார்.


பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமன் வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டார். அவர், 'தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை இன்று விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அமைதியை வலியுறுத்தும் நோக்கில் இந்த விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்தது. இதைத்தொடர்ந்து, வாகா எல்லையில் அபினந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்தார். 

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ நிலையங்களை நோக்கி தாக்குதல் நடத்த முயன்ற 24 பாகிஸ்தான் போர் விமானங்களை, இந்தியாவை சேர்ந்த 7 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி, பதில் தாக்குதல் மேற்கொண்டது. இதில் மிக்-21 ரக போர் விமனாத்தை இயக்கிய போர் விமானி அபினந்தன் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் f-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். 

இதைத்தொடர்ந்து நடந்த பதில் தாக்குதலில் அபினந்தன் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பித்து குதித்த அபினந்தன் பாகிஸ்தான் பகுதியில் தரையிரங்கியதால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைவைக்கப்பட்டார்.

இதையடுத்து, எந்த நிபந்தனையுமின்றி பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியவந்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவித்தார்.

பின்னர், அபினந்தன் வர்தமனை, தாயகம் அழைத்து வர இந்திய அரசு தரப்பு, பாகிஸ்தானுக்கு ஒரு சிறப்பு விமானப்படை விமானத்தை அனுப்பலாம் என்று திட்டமிட்டிருந்தது, அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக NDTV-க்குத் தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அபிந ந்தன் வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் இந்திய வீரர் அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் உள்ள அத்தாரி பகுதியில் பெரும் அளிவிலான மக்கள் கூட்டம் கூடியது. இதேபோல், அபினந்தனின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக இந்திய அளவில் #WelcomeBackAbhi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியது.

மேலும் படிக்க - "வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார் அபினந்தன்!"சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................