This Article is From Jul 06, 2019

தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆக பதிவு!

லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் 202 கி.மீ (125 மைல்) தொலைவில் உள்ள டெத் வேலி தேசிய பூங்காவின் விளிம்பில் உள்ள ரிட்ஜெக்ரெஸ்ட் நகரத்தை நிலநடுக்கம் தாக்கியது. இது ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு நிறுவனத்தால் 7.1 ஆக அளவிடப்பட்டுள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆக பதிவு!

லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் 202 கி.மீ (125 மைல்) தொலைவில் பூகம்பம் தாக்கியது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது கடந்த 25 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் என அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் 202 கி.மீ (125 மைல்) தொலைவில் உள்ள டெத் வேலி தேசிய பூங்காவின் விளிம்பில் உள்ள ரிட்ஜெக்ரெஸ்ட் நகரத்தை நிலநடுக்கம் தாக்கியது. இது ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு நிறுவனத்தால் 7.1 ஆக அளவிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் அங்குள்ள கட்டிடங்களுக்கு சில சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக சான் பெர்னார்டினோ கவுண்டி தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், நேற்று மீண்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதேபோல், வியாழனன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரு சிலருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இரண்டு வீடுகளில் உடைந்த எரிவாயு குழாய்கள் தீப்பிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் பல குடியிருப்புகளின் அடித்தளங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் மெட்ரோலிங்க் பயணிகள் ரயில் சேவை ட்விட்டர் பக்கத்தில், 4 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

.