This Article is From Nov 28, 2019

West Bengal bypolls: திரிணாமூல் வெற்றி; பாஜகவுக்கு ‘பன்ச்’ கொடுத்த மம்தா பானர்ஜி!

“ஆதிக்கம் செலுத்தும் அரசியல் இங்கு உதவாது. பாஜக-வை மக்கள் நிராகரித்துள்ளார்கள்”

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜக, இடைத் தேர்தலில் சறுக்கியுள்ளது அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

New Delhi/Kolkata:

மேற்கு வங்கத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றியடைந்துள்ளது. இது குறித்து மம்தா, “ஆதிக்கம் செலுத்தும் அரசியல் இங்கு உதவாது. பாஜக-வை மக்கள் நிராகரித்துள்ளார்கள்,” என்று கூறியுள்ளார். 

மேற்கு வங்கத்தின் காரக்பூர், காலிகஞ்ச் மற்றும் கரிம்பூரில் சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. இதில் கராக்பூர் மற்றும் காலிகஞ்ச் தொகுதிகளில் திரிணாமூல், கடந்த 30 ஆண்டுகளில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜக, இடைத் தேர்தலில் சறுக்கியுள்ளது அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது. கடந்த திங்கட்கிழமை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. அப்போது பாஜக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், திரிணாமூல் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு நிலவி வருகிறது. 

.