This Article is From Feb 19, 2019

100 மணி நேரத்தில் ராணுவம் காட்டிய அதிரடி; புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி!

சமீபத்தில் காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து, நேற்று அப்பகுதியில் என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டது.

100 மணி நேரத்தில் ராணுவம் காட்டிய அதிரடி; புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி!

செய்தியாளர்களை சந்தித்த ராணுவத் தரப்பு, ‘புல்வாமா தாக்குதல் நடந்த 100 மணி நேரத்துக்குள் ஜெய்ஷ் அமைப்பின் தலைமையை ஒழித்துக் கட்டிவிட்டோம்’ என்று கூறியது. 

Srinagar:

சமீபத்தில் காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து, நேற்று அப்பகுதியில் என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டது. இதில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி கம்ரான் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராணுவத் தரப்பு, ‘புல்வாமா தாக்குதல் நடந்த 100 மணி நேரத்துக்குள் ஜெய்ஷ் அமைப்பின் தலைமையை ஒழித்துக் கட்டிவிட்டோம்' என்று கூறியது. 

 

மேலும் படிக்க : 12 மணி நேர எண்கவுண்டர்! - புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, ‘நாங்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை புலனாய்வு செய்து வந்தோம். காஷ்மீரில் அந்த அமைப்புக்கு இருந்த தலைவர்கள் அனைவரையும் ஒழித்துகட்டிவிட்டோம்' என்று கூறியது.

அப்போது பேசிய ஒரு ராணுவ அதிகாரி, ‘காஷ்மீரில் இருக்கும் தாய்மார்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம். உங்கள் மகன், ஆயுதம் ஏந்தியிருந்தால், அதை உடடியாக துறக்கச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் கடைசி தீவிரவாதியை கொல்லும் வரை ஓயமாட்டோம்' என்று வேண்டுகோள் விடுத்தார். 

மேலும் படிக்க : காஷ்மீர் தாக்குதல்: சவூதி மூலமாகவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா திட்டம்

.