This Article is From Jul 22, 2020

உலகின் மிக திறமையான ட்ரோன்களை பெறுகிறது இந்திய ராணுவம்!

ட்ரோன் கடுமையான குளிர் காலநிலை வெப்பநிலையிலும் இயங்கும் தன்மைக் கொண்டது. மேலும் கடுமையான வானிலையை சமாளிக்கும்படி உருவாக்கப்பட்டதாகும்.

உலகின் மிக திறமையான ட்ரோன்களை பெறுகிறது இந்திய ராணுவம்!

பாரத் என பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோனில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டுள்ளது,

ஹைலைட்ஸ்

  • DRDO சார்பாக உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
  • இந்த ட்ரோன் தன்னியக்கமாக மிகத் துல்லியத்துடன் இயங்கக்கூடியது
  • இந்த ட்ரோனில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டுள்ளது
New Delhi:

சமீபத்தில் லடாக்கின் கிழக்குப் பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிமைடயேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் எல்லை பகுதியில் தொடர்ந்து வரும் மீறல்கள் மற்றும் மாற்றங்களை கண்காணிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) சார்பாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ட்ரோன்கள் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

“கிழக்கு லடாக் பகுதியில் நடந்து வரும் தகராறில் துல்லியமான கண்காணிப்புக்கு இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தேவை. இதற்காக, டிஆர்டிஓ அவர்களுக்கு பாரத் ட்ரோன்களை வழங்கியுள்ளது.” என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிய மற்றும் சக்திவாய்ந்த இந்த ட்ரோன் எந்த இடத்திலும் தன்னியக்கமாக மிகத் துல்லியத்துடன் இயங்கக்கூடியது. முன்கூட்டியே வெளியீட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய யூனிபோடி(unibody) பயோமிமடிக் வடிவமைப்புடன் கூடிது இந்த ட்ரோன். மேலும், பாரத் என பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோனில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டுள்ளது, இது நண்பர்களையும் எதிரிகளையும் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க உதவுகிறது.

ட்ரோன் கடுமையான குளிர் காலநிலை வெப்பநிலையிலும் இயங்கும் தன்மைக் கொண்டது. மேலும் கடுமையான வானிலையை சமாளிக்கும்படி உருவாக்கப்பட்டதாகும்.

ட்ரோன் முழு பயணத்தின்போதும் நிகழ்நேர(real-time) வீடியோ பரிமாற்றத்தை வழங்குகிறது மற்றும் மிகவும் மேம்பட்ட இரவு பார்வை திறன்களைக் கொண்டுள்ளது, இது ஆழமான காடுகளில் மறைந்திருக்கும் மனிதர்களையும் கண்டறியும். மேலும், ராடார் மூலம் கண்டுபிடிக்க முடியாத வகையில் ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.