This Article is From Aug 04, 2019

24 மணி நேரத்திற்குள் அடுத்த பயங்கரம்! அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!!

டெக்சாஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பம் ஓகியோவில் நடந்துள்ளது.

24 மணி நேரத்திற்குள் அடுத்த பயங்கரம்! அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!!

மொத்தம் 2 துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக ஓகியோ மாகாணத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க நேரத்தின்படி நள்ளிரவு 1 மணிக்கு ஓகியோவில் தாக்குதல் நடந்திருக்கிறது. அங்குள்ள ஒரேகான் மாவட்டத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு செய்துள்ளார். 

இந்த சம்பவத்தின்போது போலீஸ் அதிகாரிகள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். மொத்தம் 9 பேர் ஓகியோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக அதிர்ச்சி தரும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. 

இருவேரு துப்பாக்கிச் சூடு சம்பங்களில் அமெரிக்கா 29 உயிர்களை இழந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று உறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக நேரில் கண்ட சாட்சியங்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

.