This Article is From Aug 01, 2019

உன்னாவ் வழக்கு: பள்ளி மாணவியின் சரமாரி கேள்வி; திணறிய போலீஸ் அதிகாரி

பிரச்சனைகளின் போது, குரல் எழுப்புவதற்கும் எதிர்ப்பதற்கும் உள்ள உரிமைகள் பற்றி நீண்ட நேரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கவுதம் பேசினார்.

உன்னாவ் வழக்கு: பள்ளி மாணவியின் சரமாரி கேள்வி; திணறிய போலீஸ் அதிகாரி

ன்னாவ் வழக்கு குறித்து மாணவி கேள்வி எழுப்பியதும் அதிகாரி வாயடைத்து போனார்.

ஹைலைட்ஸ்

  • Cops in UP's Barabanki are visiting schools marking police security week
  • Top cop spoke about women's safety, right to raise one's voice, protest
  • "If we protest, how will you ensure justice?", the student asked top cop
Barabanki:

பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான சிறுமி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அந்த வழக்கை மோசமாகக் கையாண்டு வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் விரிவுரை வழங்கினார்.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற காரின் மீது, பதிவு எண் இல்லாத லாரி மோதியது. பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய இந்த விபத்து சம்பவத்தில், அந்தச் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு அவர் தொடர்ந்து போராடி வருகிறார். 

தற்போது இந்த சம்பவம் குறித்தும் செங்கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பு, இது குறித்து விசாரணை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் எம்.எல்.ஏ செங்கார் தரப்பிடமிருந்து தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபக்குக் கடிதம் எழுதியது. 

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு வழங்கு வந்தனர். அப்போது, ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி போலீசை நோக்கி கேட்ட கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி போனார். 

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. அதில், உன்னாவ் வழக்கில் பாஜக எம்எல்ஏ-வால் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் தெரிவித்த நிலையில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது. அனைவருக்கும் தெரியும் அது விபத்து அல்ல என்று, அந்த லாரியில் பதிவு எண் கூட இல்லை. 

இதுவே சாதாரண மனிதர்களை எதிர்க்கும் போதும், பலமான மனிதர்களை எதிர்ப்பதிலும் உள்ள வித்தியாசம். தற்போது அந்த சிறுமி உயிருக்கு போராடி வருகிறார். இதற்கு எதிராக நான் போராடினால், என் பாதுகாப்புக்கு நீங்கள் உத்தரவாதம் தர முடியுமா? எனக்கு எதுவும் அவாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா என்று அந்த மாணவி சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

இதைத்தொடர்ந்து, இதற்கு பதில் தெரிவிக்க முடியாமல் அந்த போலீஸ் அதிகாரி திகைத்து அமைதியாக இருக்கிறார். 

.