
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்திலிருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குல்தீப் செங்கர். அவர் கட்சியிலிருந்து 2019 ஆகஸ்டில் வெளியேற்றப்பட்டார்.
ஹைலைட்ஸ்
- உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் செங்கர் 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பு
- உன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கில் செங்கர், அதுல் சிங் குற்றவாளிகள்
- புகார் தெரிவிப்பதை தடுக்க கொலை செய்ததாக இருவர் மீதும் குற்றச்சாட்டு
உன்னாவ் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலையான வழக்கில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக உன்னாவ் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் செங்கருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை தீயிட்டுக் கொளுத்தியது.
90 சதவீத காயங்கள் அடைந்த அவரை, டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். இருப்பினும் அவர் அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் வெளிநாட்டு ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த மறு நாள் அவரது தந்தை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, முகங்களில் காயங்கள் காணப்பட்டன. அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் 14 இடங்களில் காயம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் செங்கர், அவரது சகோதரர் அதுல் சிங் செங்கர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இருவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் பெண்ணின் தந்தை உயிரிழந்த சில மாதங்களுக்குப் பின்னர், அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் 'குல்தீப் செங்கரின் சகோதரர் அதுல் சிங் என்னைத் தாக்கினார். அவரிடமிருந்து யாரும் என்னைக் காப்பாற்றவில்லை. போலீசார் வேடிக்கை பார்த்தனர். அவர்கள் உதவி செய்யவில்லை' என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ வெளியான பின்னர், குல்தீப் மற்றும்,அதுல் சிங் ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சில போலீசார் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்திலிருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குல்தீப் செங்கர். அவர் கட்சியிலிருந்து 2019 ஆகஸ்டில் வெளியேற்றப்பட்டார்.