This Article is From Mar 09, 2020

'பாஜக இந்துத்துவாவை கடைப்பிடிக்கவில்லை' - சிவசேனா கடும் விமர்சனம்!!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மகாராஷ்டிர அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அயோத்தியில் ஆரத்தி நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • உத்தவ் தாக்கரே அயோத்தியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்
  • ராமர் கோயில் கட்ட மகாராஷ்டிர அரசு ரூ.1 கோடி வழங்கவுள்ளது
  • அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது
Lucknow:

பாஜக இந்துத்துவாவை கடைப்பிடிக்கவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக சிவசேனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் எனப் போராடிய அமைப்புகளில் சிவசேனாவும் ஒன்று. தற்போது அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், கோயில் கட்டுவதற்காக ரூ. 1 கோடியை சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிர அரசு வழங்கவுள்ளது.

இந்த நிலையில், முதல்வரான பின்னர் முதன்முறையாக சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே அயோத்திக்கு வந்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

எனக்கு பாஜகவுடன்தான் பிரிவு ஏற்பட்டதே தவிர இந்துத்துவாவுடன் ஏற்படவில்லை. பாஜக இந்துத்துவாவை கடைப்பிடிக்கவில்லை. இந்துத்துவா என்பது வேறு மாதிரியான விஷயம். அதனை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன். 

கடந்த முறை நான் அயோத்திக்கு வந்தபோது, ராமர் கோயில் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தது.நான் இங்கு 2018 நவம்பரில் வந்ததேன். 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. நானும் முதல்வராகி விட்டேன். 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினேன். அவரிடம், நாம் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று கூறினேன். கோயிலைக் கட்டுவதற்கு உதவிக்கு வரும் ராம பக்தர்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தேன். 

மகாராஷ்டிர அரசு சார்பாகக் கோயில் கட்டுவதற்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் அயோத்தி விவகாரம் தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதன்படி அங்கு ராமர் கோயில் கட்டிக்கொள்ள இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும். 

இதன்படி அயோத்தியில் தனிப்பூர் கிராமத்தில் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

.