This Article is From Jul 02, 2019

சாலையில் வரும் கார்கள் திடீர் மாயமாகும் விசித்திரம்- வீடியோ பாருங்க!

வீடியோவை கொஞ்சம் உற்று நோக்கினால், இந்த மாயை குறித்து புரிந்து கொள்ள முடியும்.

சாலையில் வரும் கார்கள் திடீர் மாயமாகும் விசித்திரம்- வீடியோ பாருங்க!

ட்விட்டரில் டேனியல் என்ற பெயருடன் இருக்கும் ஒரு பயனர், இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

‘ஆப்டிக்கல் இல்யூஷன்' என்று சொல்லப்படும் மாயை, இணையத்தில் அடிக்கடி வைரலாவதைப் பார்த்திருப்போம். தற்போது நெட்டிசன்ஸிடம் ட்ரெண்டாகி வரும் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷனும் அப்படித்தான். 

இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் வீடியோவில், நதியின் மீதிருக்கும் பாலத்தில் வரும் வாகனங்கள் திடீரென்று காணாமல் போகின்றன. வீடியோவை திரும்ப திரும்ப பார்த்தாலும் அதற்கான விடை கிடைக்கவில்லை. இதனால், பல நெட்டிஸன்கள் இந்த வீடியோ ஷேர் செய்து, ‘என்ன நடக்கிறது?' என்று வியப்புடன் கருத்திட்டு வருகின்றனர். 

ட்விட்டரில் டேனியல் என்ற பெயருடன் இருக்கும் ஒரு பயனர், இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோவுடன், “நீங்கள் நினைப்பது சரிதான். டிராஃபிக் காணாமல் போகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவைப் பாருங்கள்:

ஆனால், வீடியோவை கொஞ்சம் உற்று நோக்கினால், இந்த மாயை குறித்து புரிந்து கொள்ள முடியும். பாலம் போல இருக்கும் அந்த இடமானது பாலமே இல்லை. அது ஒரு சாலை. நதி போல தெரிவது, ஒரு மொட்டைமாடி. அங்கிருந்து ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோதான் மாயை-ஐ உருவாக்குகிறது. சில ட்விட்டர் பயனர்கள் மாயை குறித்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு, அது குறித்தும் பகிர்ந்துள்ளனர். 

Click for more trending news


.