
சாலை விபத்தில் இருந்து நொடிப்பொழுதில் உயிர்தப்பிய மனிதர்
கேரளாவில் சாலை விபத்தில் இருந்து நொடிப்பொழுதில் உயிர்தப்பிய ஒருவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பயணங்களைப் பொறுத்தவரையில் எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கும். பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, கல் தடுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்பார்கள். எல்லாம் நமது நேரத்தைப் பொறுத்து தான் அமைகிறது என்று சொல்வார்கள்.
அந்த வகையில், தற்போது கேரளாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையின் ஓரமாக ஒருவர் சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிரே ஒரு வாகனம் வேகமாக வர, பின்னாடி இருந்து மற்றொரு வாகனம் வந்தது. அவருக்கு பின்னால் வந்த வாகனம், தாறுமாறாக ஓடி சாலையை விட்டு இறங்கி சென்றது.
அந்த ஒரு நிமிடம் வழிபோக்கர், நொடிப்பொழுதில் எந்த சிராய்ப்பும், மோதலும் இன்றி தப்பித்தார். இவருக்கு அருகில், சாலையை விட்டு தரையிறங்கிச் சென்ற வாகனம் நேராக சென்று கம்பத்தில் மோதியது. இதனையடுத்து, பதறிய அந்த வழிப்போக்கர், அங்கிருந்து பயத்தில் ஓடி சென்றார்.
இந்த வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் @nisarpari என்பவர் பகிர்ந்துள்ளார். அதன்படி, இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பதிவான சிசிடிவி காட்சி என்று கூறப்படுகிறது. வெறும் 22 நொடிகள் மட்டும் ஓடக்கூடிய இந்த வீடியோ, பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.:
Luckiest man of the month award goes to this man.
— Nisar നിസാർ (@nisarpari) August 22, 2020
Chavara, Kollam District,Kerala. pic.twitter.com/dAGnteQpDe
— Anuvab Biswas (@abiswas25) August 23, 2020
people walking on roads is common but overspeeding truck going on the sidewalk isn't. https://t.co/tTcUs8fXr2
— Goutham Ganesh (@Goutham3113) August 23, 2020
So close, oh my! He wasn't aware and escaped being hit by a whisker...epic
— Yuka Gly (@GlyYuka) August 23, 2020