
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
பிரேசிலில் அனகோண்டா பாம்பு ஒன்று, முதலையை அப்படியே விழுங்க முயற்சிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிரேசில் நாட்டிலுள்ள மனாஸ் அருகே உள்ள பொன்டா நெக்ரா என்ற கிராமத்தில் அனகோண்டா பாம்பு வந்துவிட்டது. அப்போது கிராமத்தில் கிடந்த முதலையை விழுங்குவதற்காக, அதை அப்படியே லாவகமாக சுருட்டி நெருக்கியது.
இதனைக் கண்ட கிராம மக்கள் அனகோண்டா பாம்பிடம் இருந்து முதலையை மீட்க துணிந்தனர். பாம்பின் மீது கொக்கி மூலம் கயிறு கட்டி, பாம்பை இழுத்தனர். கடைசியாக அனகோண்டா பாம்பு, முதலையை விட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அந்த மலைப்பாம்பின் நீளம் கிட்டத்தட்ட 6 அடிக்கு மேல் இருந்ததாக கூறுகின்றனர். கடைசியாக பாம்பையும், முதலையையும் காட்டுக்குள் விட்டு வந்தனர்.
முதலையை விழுங்கும் பாம்பு:
Ê CAROÇO! ????
— Manaus POP A 911????️???? (@manaus_pop) August 17, 2020
Uma sucuri foi flagrada tentando engolir um jacaré na área de um condomínio na Ponta Negra. ???????? pic.twitter.com/d3JlCQm3Ey
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பலதரப்பட்ட கருத்துகளும் வந்துள்ளன. சிலர், இது ஒரு உணவுச்சங்கிலி, இதனை ஏன் பிரிக்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.