அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி!

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சுடு சம்பவம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சான் பெர்ணாடினோவில் உள்ள அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸில் ஞாயிறு இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 10 பேர் இறந்துள்ளதாக அம்மாகாண போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர்.

இது குறித்து போலீஸ் தரப்பு, ‘எங்களுக்கு இரவு 10:45 மணி அளவில் போன் அழைப்பு வந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தோம். 10 பேர் இறந்த நிலையில் கிடந்தனர். மூவரின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது’ என்றுள்ளது.

பெர்ணாடினோ, லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சுடு சம்பவம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................