This Article is From Jun 22, 2018

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் ரிலீஸ்... தமிழக அரசின் அடுத்த மூவ்!

முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்ட 7 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் ரிலீஸ்... தமிழக அரசின் அடுத்த மூவ்!

ஹைலைட்ஸ்

  • கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்
  • இது தொடர்பான வழக்கில் 7 பேர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளனர்
  • 7 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
Chennai: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அரசு தரப்பில் இருக்கும் ஒருவர் மூலம் தகவல் தெரவிக்கப்பட்டு உள்ளது.

ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் போது சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் கொல்லப்பட்டார். தனு என்ற தற்கொலைப்படையைச் சேர்ந்தவர் செயல்படுத்திய குண்டு வெடிப்பு மூலம் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்ய கடந்த 2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 2 ஆம் தேதி தமிழக அரசு முடிவெடுத்தது. அப்போது, விடுதலை செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசிடம் அனுமதி கேட்டது மாநில அரசு. ஆனால், ‘குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணம் அகிவிடும்’ என்று கூறி விடுதலைக்கு சம்மதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. 

இந்நிலையில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதங்களை எடுத்து வைப்போம்’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அரசு தரப்பைச் சேர்ந்தவர் நம்மிடம் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம், ‘குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் கொள்கை முடிவு மீது மூன்று மாதங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
.