This Article is From Aug 27, 2019

காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதற்கு இதுதான் காரணமாம்!!

உடல் பருமனாக இருந்தால் நிச்சயமாக உடல் எடையை குறைக்க வேண்டும்.  இதனாலும் இரத்த சர்க்கரை அளவு சீராகும். 

காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதற்கு இதுதான் காரணமாம்!!

ஹைலைட்ஸ்

  • உடல் பருமனை குறைக்கும்போது உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
  • நீரிழிவு நோய் காரணமாக பார்வை குறைபாடு உண்டாகும்.
  • இரவு நேரத்தில் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

பொதுவாகவே காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.  ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவு இன்னும் அதிகரித்துவிடும்.  காலை உணவு சாப்பிடுவதற்கு முன் இந்நிலை இருக்கும்.  டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்கள் அடிக்கடி இரத்த சர்க்கரையை பரிசோதித்து கொண்டே இருப்பது நல்லது.  இதனால் அபாயகரமான பாதிப்பை தடுக்க முடியும்.  நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு ஹார்மோன் சுரப்பு காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.  உடலில் இன்சுலின் அளவை பொருத்து நீரிழிவு நோயின் தாக்கம் மாறுபடும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு காலை 4 மணி முதல் 8 மணி வரை இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தே காணப்படும்.  உடலுக்கு போதுமான அளவு இன்சுலின் சுரக்காததன் விளைவாக இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து இருக்கும்.  இதனால் குமட்டல், வாந்தி, தலைசுற்றல், பார்வை குறைபாடு, தாகம், சோர்வு மற்றும் உடல் எடை குறைவு போன்றவை ஏற்படும்.  காலை நேரத்தில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சில எளிய குறிப்புகளை தெரிந்து வைத்து கொள்வோமா!!!

* மருத்துவரை அணுகி, காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க அதிக வீரியம் கொண்ட மருந்துகளை பெறலாம்.  

* லேசான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த காலை உணவுகளை உட்கொள்ளலாம்.  

* மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்.  

* இரவு தூங்க செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை சாப்பிடலாம். 

* இரவு உணவிற்கு பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்யலாம். 

* இரவில் கார்போஹைட்ரேட் குறைவான உணவை சாப்பிடலாம். 

* காலை உணவை கட்டாயமாக தவிர்க்க கூடாது. 

8o82qfp8

இரத்த சர்க்கரையை குறைக்க மேலும் சில வழிகள்:

* கார்போஹைட்ரேட் அளவை குறைத்து உணவு கட்டுப்பாட்டை பின்பற்றினால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

* தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதுடன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

*  உங்கள் உணவில் நார்ச்சத்து மிகுதியான உணவுகளை சேர்த்து கொள்ளலாம். 

* அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து வரலாம். 

* 6-8 மணி நேரம் வரை ஆழ்ந்த உறக்கம் கட்டாயம் தேவை.  

* உடல் பருமனாக இருந்தால் நிச்சயமாக உடல் எடையை குறைக்க வேண்டும்.  இதனாலும் இரத்த சர்க்கரை அளவு சீராகும். 

t168540g

இரத்த சர்க்கரை இருப்பவர்கள் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். 

.