ஹைலைட்ஸ்
- வெவ்வேறு பழங்களின் கிளைசமிக் இண்டெக்ஸை பரிசோதித்து சாப்பிடலாம்.
- நார்ச்சத்து மிகுந்த பழங்களை சாப்பிடும்போது இரத்த அழுத்தம் அதிகரிக்காது.
- ஃப்ரெஷ்ஷான பழங்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
செய்யக்கூடாதவை:
1. ஃப்ரெஷான மற்றும் அந்தந்த பருவத்தில் கிடைக்கக்கூடிய பழங்களை வாங்கி சாப்பிடலாம். ஆனால், பதப்படுத்தப்பட்ட பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
2. பழங்களை முன்கூட்டியே வெட்டி வைத்து சாப்பிட கூடாது. இதனால் பழங்களிலுள்ள சத்துக்கள் வீணாகிவிடும்.
3. க்ளைசமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருக்கும் பழங்களை சாப்பிடக்கூடாது.
4. பேக் செய்து வைக்கப்பட்ட பழங்களை தவிர்த்திட வேண்டும். இதில் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுகிறது.
5. பழங்களை மட்டுமே தொடர்ச்சியாக சாப்பிடக்கூடாது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி சாப்பிடலாம்.
6. அதிகபடியாக பழுக்காத பழங்களை தேந்தெடுத்து சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை அருந்தக்கூடாது. அதில் நார்ச்சத்து துளியும் இல்லை. மேலும் அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை தவிர்த்து பழங்களை சாப்பிடலாம். ப்ளூபெர்ரி, பேரிக்காய், செர்ரி, திராட்சை, பீச், ப்ளம்ஸ், க்ரேப்ஃப்ரூட், ஆரஞ்சு மற்றும் கொய்யா ஆகிய பழங்களை சாப்பிட்டு வரலாம். நீரிழிவு நோயாளிகள் குறிப்பாக தர்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு ஆகிய பழங்களை சாப்பிடலாம். 100 கிராம் பழங்கள் சாப்பிடுவதே போதுமானது. மேலும் இந்த பழங்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது.