This Article is From Oct 04, 2019

'ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நீண்ட நாட்களுக்கு சார்ந்திருக்க முடியாது' - ராஜ்நாத் சிங்

டெல்லியில் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

'ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நீண்ட நாட்களுக்கு சார்ந்திருக்க முடியாது' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

New Delhi:

ஆயுதங்களை நீண்ட நாட்களுக்கு நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது என்றும், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். 

டெல்லியில் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது-

இந்தியா வல்லரசு நாடாக மாறும் பாதையில் பயணம் செய்கிறது. இதற்காக நாம் ஆயுதங்களுக்காக தொடர்ந்து நாம் வெளிநாடுகளை சார்ந்து இருக்க முடியாது. நீண்ட நாளைக்கு நம்மால் ஆயுதங்களை இறக்குமதி செய்ய முடியாது. 

எனவே, நவீன ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு நாம் நிபுணத்துவம் பெற வேண்டும். நான் அமைச்சராக பொறுப்பேற்றபோது என்னிடம் ஆயுத பேரம் நடத்த வருபவர்கள் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஏனென்றால் அவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கக் கூடும் என்றும் சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். 

ஊழல்வாதிகள்தான், முடிவுகள் எடுப்பதற்கு பயப்பட வேண்டும். அதைப்பற்றிய கவலை எனக்கு இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 
 

.