‘விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாயா..?’- பட்ஜெட் அறிவிப்பால் கொதித்த ராகுல்

மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாயா..?’- பட்ஜெட் அறிவிப்பால் கொதித்த ராகுல்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.


New Delhi: 

மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில், ‘2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிசான் திட்டம் மூலம் 6,000 ரூபாய் வரை கிடைக்கும். 3 தவணைகளில் இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குளில் செலுத்தப்படும். கிசான் திட்டம் மூலம் 12.5 கோடி விவசாயிகள் குடும்பம் பயனடையும். டிசம்பர் 2018 முதலே இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசுக்கு  75,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். 

இந்த அறிவிப்பு குறித்து ஆளுங்கட்சித் தரப்பூ பூரிப்புடன் கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு வெறும் 17 ரூபாய் கொடுப்பது என்பது அவர்களை அசிங்கப்படுத்தும் செயல்' என்று கடுமையாக சாடியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் மேலும் கூறுகையில், ‘5 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் போதாமையாலும், ஆணவத்தாலும் விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு விவசாயிகளுக்கு வெறும் 17 ரூபாய் கொடுப்பது என்பது அவர்களை அசிங்கப்படுத்தும் செயல்' என்று கொதிப்புடன் பகிர்ந்துள்ளார். 


 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................