This Article is From Oct 27, 2018

அமிர்தசரஸ் விபத்து : ரயில்வே அமைச்சருக்கு அறிவுரை கூறும் சித்து

அமிர்தசரஸ் விபத்து தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கடிதம் எழுதியுள்ளார்.

அமிர்தசரஸ் விபத்து : ரயில்வே அமைச்சருக்கு அறிவுரை கூறும் சித்து

தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி விபத்தை தவிர்க்க வேண்டும் என சித்து கூறியுள்ளார்

Chandigarh:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின்போது ரயில் விபத்து ஏற்பட்டது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது-

ரயில்வே பாதையை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறங்களில் வேலிகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் ரயில் பாதையை கடந்து விபத்தில் மக்கள் சிக்கிக் கொள்வதை தடுக்க முடியும்.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் வழியே செல்லும் ரயில் பாதைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். பாதுகாப்பு பணிகளுக்காக ரயில்பாதை நெடுகிலும் ரயில்வே போலீசாரை நிறுத்தலாம்.

இதனை தவிர்த்து வழக்கமாக ரயில் பாதையை கண்காணிக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அமிர்தசரஸ் விபத்தில் இருந்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சித்து கூறியுள்ளார்.

.