This Article is From Jun 24, 2020

4 நாட்களாக வாசலில் காத்திருக்கும் போலீஸ்: வெளியே வராத காங்கிரஸ் எம்எல்ஏ!

சித்துவின் இல்லத்திற்கு வெளியே தினமும் 4 முதல் 5 மணி நேரம் ஜாமீன் பத்திர தாளில் கையெழுத்து பெற காத்திருக்கிறார்கள்.

4 நாட்களாக வாசலில் காத்திருக்கும் போலீஸ்: வெளியே வராத காங்கிரஸ் எம்எல்ஏ!

4 நாட்களாக வாசலில் காத்திருக்கும் போலீஸ்: வெளியே வராத காங்கிரஸ் எம்எல்ஏ! (File)

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் எம்எல்ஏ நவஜோத் சிங்கிற்கு எதிராக வழக்கு
  • 4 நாட்களாக வீட்டு வாசலில் காத்திருக்கும் போலீஸ்
  • அவர் வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
Amritsar:

காங்கிரஸ் எம்எல்ஏ நவஜோத் சிங்கிற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர், பீகார் போலீசாரை சந்திக்காததை தொடர்ந்து, அவர் வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

2019 மக்களவைத் தேர்தல் சமயத்தில் பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் உரையாற்றியபோது, ஒரு சமூகத்திற்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததற்காக நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, ஜூன் 18ம் தேதி முதல், பீகார் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு துணை காவல் ஆய்வாளர்கள் சித்துவின் இல்லத்திற்கு வெளியே தினமும் 4 முதல் 5 மணி நேரம் ஜாமீன் பத்திர தாளில் கையெழுத்து பெற காத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக கதிஹாரில் இருந்து வந்த துணை காவல் ஆய்வாளர் ஜனார்த்தன் ராம் கூறும்போது, "நாங்கள் ஜூன் 18ம் தேதியன்று இங்கு வந்தோம், அதன் பின்னர் நான் தினமும் இங்கு வருகிறேன், ஆனால் யாரும் இதனைப் பெறவில்லை. இப்போது நான் ஒரு அறிவிப்பை ஒட்டியுள்ளேன். நாங்கள் தினமும் இங்கு வந்து 4 முதல் 5 மணி நேரம் உட்கார்ந்திருப்போம் . "

தேர்தல் நடத்தை விதி மீறல் காரணமாக பீகாரில் மக்களவைத் தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.