This Article is From Mar 27, 2020

கோவிட் -19 நோயால் இறந்த பஞ்சாபைச் சார்ந்த நபர். சீல் வைக்கப்பட்ட 15 கிராமங்கள்

மேலும், இவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அவர் 100 நபர்களுடன் நெருங்கியிருந்துள்ளார். மேலும், அவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மாநிலம் முழுவதும் 15 கிரமங்களைச் சுற்றியுள்ளதாக கருதப்படுகிறார்கள்.

கோவிட் -19 நோயால் இறந்த பஞ்சாபைச் சார்ந்த நபர். சீல் வைக்கப்பட்ட 15 கிராமங்கள்

பஞ்சாபில் 30 க்கும் மேற்பட்ட COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • Punjab has reported over 30 COVID-19 cases, one person has died
  • 70-year-old returned from Europe on March 6, defied quarantine rules
  • In his family, 14 have tested positive. Granchildren met scores on people
Chandigarh, Punjab:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்ற சூழலில், நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்க நடவடிக்கையினை கடைப்பிடித்து வருகின்றது. இந்த நிலையில் பஞ்சாபில் கடந்த 18 அன்று உயிரிழந்த நபர் அம்மாநிலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 33 நபர்களில் 23 பேருக்கு இவர் தொற்று பரப்பியதாக நம்பப்படுகின்றது.

தனது அருகாமை கிராமத்தைச் சார்ந்த நண்பர்களோடு ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளுக்கு இரண்டு வாரச் சுற்றுலா முடித்துக்கொண்டு 70 வயதான குருத்வாரா பாதிரியார் மார்ச் 6 அன்று டெல்லி திரும்பினார். ஆனால், அவர் சுய தனிப்படுதலுக்கான விதிகளை மீறிவிட்டு பஞ்சாபிற்குச் சென்றுள்ளார்.

மார்ச் 8-10 தேதிகளில் ஆனந்த்பூர் சாஹிப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பியதை தொற்றுநோய்களை கண்காணிக்கும் அதிகாரிகள் அறிந்துள்ளனர்.

மேலும், இவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அவர் 100 நபர்களுடன் நெருங்கியிருந்துள்ளார். மேலும், அவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மாநிலம் முழுவதும் 15 கிரமங்களைச் சுற்றியுள்ளதாக கருதப்படுகிறார்கள்.

தற்போது இறந்துள்ள நபரின் குடும்பத்தில் 14 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அவரது பேத்தி பேரன்கள் பலரை சந்தித்திருக்கிறார்கள்.

அதிகாரிகள் கண்டறிந்துள்ள புதிய நோயாளிகள் மேற்குறிப்பிட்ட பொறுப்பற்ற மூன்று நபர்களால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

நவன்ஷஹர், மொஹாலி, அமிர்தசரஸ், ஹோஷியார்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் இந்த மூவரும் கொரோனா வைரஸ் தொற்றைப் பரப்பியதாக நம்பப்படுகிறது.

இந்தியா முழுவதும் கிட்டதட்ட 700 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் 17 பேர் இறந்துள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது.

.