This Article is From Nov 11, 2019

பிரபல காஃபி ஷாப்பின் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா!! வைரலாகும் பதிவு!!

காஃபி ஷாப்பிற்கு அந்த பெண் சென்ற போது அங்கிருந்த கழிவறையில் ரகசிய கேமரா அவரது கண்ணிற்கு தென்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல காஃபி ஷாப்பின் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா!! வைரலாகும் பதிவு!!

காஃபி ஷாப்பின் கழிவறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

புனேவின் பிரபல காஃபி ஷாப்பின் கழிவறையில் ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தது தொடர்பான பெண்ணின் பதிவு இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் காஃபி ஷாப்பின் கழிவறையில் ரகசிய கேமராவை கண்டுபிடித்தது தொடர்பாக புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது சமூகவலைதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவு பல பெண்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 

புனே போலீசார் கூறும்போது, இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதுதொடர்பாக அந்த பெண்ணின் பதிவில், புனேவில் உள்ள BeHive காஃபி ஷாப்பிற்கு தான் சென்றபோது அங்கிருந்த கழிவறையில் ரகசிய கேமரா அவரது கண்ணிற்கு தென்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

அப்போது, அந்த பெண்ணை 10 நிமிடம் காத்திருக்க கூறிய அந்த காஃபி ஷாப் நிர்வாகம் கழிவறையில் இருந்த கேமராவை உடனடியாக நீக்கியுள்ளது. எனினும், அந்த பெண் அந்த கழிவறையில் இருந்த கேமராவை தனது மொபைலில் புகைப்படம் எடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த ட்வீட்டர் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. 


இதனை பார்த்த புனே போலீசார், அந்த பெண்ணிடம் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து, இந்த பதிவு பிரபல பாலிவுட் நடிகை கண்ணில் பட அவரும், புனே காவல் நிலையத்தை டேக் செய்து, வழக்கு பதிவு செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தார். 
 


BeHive காஃபி ஷாப்பின் இந்த விவகாரம் விஷ்வரூபம் எடுக்கவே  Zomato appல் உள்ள இந்த காஃபி ஷாப்பின் மதிப்பிட்டை குறைத்து மதிப்பிட்டு அதன் ஸ்டார் ரேட்டிங்கை மிகவும் குறைவாக 1 ஸ்டாராக குறைத்து வருகின்றனர். 


இதையடுத்து, BeHive காஃபி ஷாப் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. 
 

.