This Article is From Nov 08, 2018

எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

இன்று காலை பிரதமர் மோடி எல்.கே.அத்வானியின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை டிவிட்டரில் பதிவிட்டார்.

எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி, அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

New Delhi:

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருக்கும் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். 91வது பிறந்த நாளை கொண்டாடும் எல்.கே.அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டார். அரசியலுக்காகவும், கட்சிக்காவும் அயராது உழைத்தவர் என புகழாரம் சூட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக கட்சியின் முன்னோடிகளில் வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானி முக்கியமானவர்கள். பிரதமர் மோடி எல்.கே. அத்வானி குறித்து தனது டிவிட்டர் பதிவில் அத்வானி இந்திய அரசியலில் முக்கியமானவர் மற்றும் அவரது முடிவுகளில் எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை மற்றும் மக்களுக்கு சாதகமான அம்சங்கள் நிச்சயமிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

எல்.கே.அத்வானி பாஜக தலைவராக நீண்ட நாட்கள் தொண்டாற்றுபவர் என்ற பெருமையை பெறுபவர். மேலும், வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் துணை பிரதமராக இருந்து சுயநலம் எண்ணாத விடாமுயற்சியுடன் செயல்படக்கூடிய பாஜகவை கட்டமைத்தார் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

.