This Article is From Feb 28, 2019

மசூத் அசாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் உலக நாடுகள்; சீனாவுக்கு முற்றும் நெருக்கடி!

15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், 3 வீடோ உறுப்பினர்கள் இந்தத் தீர்மானம் குறித்து முன் மொழிந்துள்ளனர்.

மசூத் அசாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் உலக நாடுகள்; சீனாவுக்கு முற்றும் நெருக்கடி!

இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு வேறாக இருப்பதாக கூறப்படுகிறது

United Nations:

கடந்த 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களில் இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் தரப்பும் ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதால் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் முன் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் அசாருக்கு, சர்வதேச அளவில் பயணம் செய்ய தடை ஏற்படும். அதேபோல அவரது சொத்துகளும் முடக்கப்படும். 

15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், 3 வீடோ உறுப்பினர்கள் இந்தத் தீர்மானம் குறித்து முன் மொழிந்துள்ளனர். இந்தத் தீர்மானம் குறித்து முடிவெடுக்க பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் கமிட்டிக்கு 10 நாட்கள் அவகாசம் உள்ளன. 

இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு வேறாக இருப்பதாக கூறப்படுகிறது. மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதி என்று கூற சீனா தயங்குவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க - "ட்ரம்ப் - கிம் சந்திப்பு முக்கிய அம்சம் நிறைந்தது: சீன வெளியுறவுத்துறை அமைச்சர்"

.