This Article is From Jan 16, 2020

UN-ல் சீனா உதவியுடன் Kahmir விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்; மீண்டும் ஃபிளாப்!!

UN Security Council - பிரான்ஸ் தரப்பு, காஷ்மீர் விவகாரம் என்பது இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஸ்திரமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

கடந்த மாதமும் சீனா, காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப முயன்றது. அதை பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்ய நாடுகள் ஏற்கவில்லை.

New Delhi:

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்ப நினைத்தது என்றும், கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக செயல்படவில்லை என்றும் NDTV-க்குத் தகவல் வந்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் கையிலெடுத்ததால், கோபமடைந்த இந்திய தரப்பு, தீவிரவாதிகளை ஒடுக்கி எங்களுடன் மீண்டும் நட்புறவை வளர்க்கப் பாருங்கள் என்று கடுகடுத்ததாம்.

“பாகிஸ்தானிடம் இருக்கும் அடிப்படை பிரச்னைகளில் இருந்து மற்ற விவகாரங்களை கையிலெடுக்கும் உத்தி தோல்வியடைந்துவிட்டது,” என்று ஐநாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் NDTV-யிடம் தெரிவித்துள்ளார்.
 

Earlier on Wednesday, Pakistan's "all-weather ally" China made the fresh pitch to raise the Kashmir issue

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய கன்சல்டேஷன் அறையில் நேற்று, பாகிஸ்தானின் கூட்டாளியான சீனா, காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்த அக்பருதீன், “மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப நினைத்து தோல்வி கண்டிருக்கிறார்கள். பாகிஸ்தனால் புனையப்பட்ட நிலைமை குறித்தோ, அதன் பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்ட ஆதாரமற்ற தரவுகள் பற்றியோ ஐநா மன்றத்தில் கவலை கொள்ளவில்லை என்பது மகிழ்ச்சி,” என்றுள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற இந்த ரகசிய சந்திப்பு என்பது ‘அதிகாரபூர்வமானது கிடையாது' என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்குத் தலைமை தாங்கிய ஐரோப்பிய அதிகாரியும், அதையே வழிமொழிந்துள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

முக்கியமாக ஐரோப்பாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி, “காஷ்மீர் என்பது உள்நாட்டுப் பிரச்னை. அதில் இரு தரப்புகள் மட்டுமே பேசி முடிவெடுக்க வேண்டும்,” எனத் தெரிவித்தாராம்.

இந்த சந்திப்பு குறித்து சீன தூதர் ஸாங் ஜுன் கூறுகையில், “ஜம்மூ காஷ்மீர் பற்றி நாங்கள் பேசினோம். தற்போது ஜம்மூ காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்,” எனக் கூறினார்.

இந்த சந்திப்பில் எதாவது நிகழ்ந்ததா என்பது குறித்து ஜுன், “காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள இரு தரப்புகளுக்கும், இனியும் அதில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடாது என்பது சந்திப்பின் மூலம் தெரிந்திருக்கும். பிரச்னை பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்திருப்பார்கள்,” என பதிலளித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்தது இந்திய அரசு. மேலும் ஜம்மூ காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அரசு பிரித்தது. அதைத் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தை சீனா, ஐநாவில் 3வது முறையாக எழுப்பியுள்ளது.

கடந்த மாதமும் சீனா, காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப முயன்றது. அதை பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்ய நாடுகள் ஏற்கவில்லை.

பிரான்ஸ் தரப்பு, காஷ்மீர் விவகாரம் என்பது இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஸ்திரமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. ஆனால் அங்கு அரசியல் தலைவர்கள் சிறை வைகப்பட்டிருப்பதற்கும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டிருப்பதற்கும் பல நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் கூட அமெரிக்கா, இது குறித்து கேள்வி எழுப்பியது.

(With inputs from PTI)

.