This Article is From Nov 15, 2018

தீபாவளி வாழ்த்து: ஹிந்துக்களைப் புறக்கணித்தாரா ட்ரம்ப்?

ட்ரம்ப் தீபாவளிக்காக முதலில் ஒரு ட்விட் செய்தார். அதில் புத்திஸ்ட்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின்களைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தீபாவளி வாழ்த்து: ஹிந்துக்களைப் புறக்கணித்தாரா ட்ரம்ப்?

ட்ரம்ப் தீபாவளிக்காக முதலில் ஒரு ட்விட் செய்தார். அதில் ஹிந்துக்கள் எனக் குறிப்பிடப்படவில்லை.

New York:

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீபாவளி வாழ்த்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ட்ரம்ப் தீபாவளிக்காக முதலில் ஒரு ட்விட் செய்தார். அதில் புத்திஸ்ட்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின்களைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ஹிந்துக்கள் எனக் குறிப்பிடப்படவில்லை. பிறகு ட்விட்டரில் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து ட்விட்டை டெலிட் செய்தார். மறுபடியும் ஹிந்துக்களைச் சேர்த்து ட்விட் செய்தார். 

இந்த ட்விட் அவரது தீபாவளி உரையின் இரண்டாவது பத்தியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் ஹிந்துக்களைக் குறிப்பிடவில்லை. ஆனால் 3 முறை தனது உரையில் ஹிந்துக்கள் குறித்து பேசியுள்ளார். 

தனது தீபாவளி உரையை ''நான் தீபாவளி கொண்டாட்டங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். என்று தனது உரையை ஆரம்பித்த ட்ரம்ப் ஒளியின் திருவிழாவாக கொண்டாடப்படும் தீபாவளி என்று பேசினார். ஆனால், சமூக பண்டிகைகளை தீபாவளியை பற்றி சொல்லவில்லை.

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டங்களின் புகைப்படங்களை ட்விட்டரில் ட்ரம்ப் பகிர்ந்து கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மிக மிக முக்கியமான நபர்கள் என்று இந்தியர்களைத் தெரிவித்தார்.

.