பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் வைத்த முக்கிய கோரிக்கை!

2009 ஆம் ஆண்டு, தெகல்கா இதழுக்காக பிரசாந்த் பூஷன் அளித்தப் பேட்டியில், ‘இதுவரை பதவியிலிருந்த 16 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பாதிபேர் ஊழல்வாதிகள்தான்’ என்று கூறியிருந்தார்.

பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் வைத்த முக்கிய கோரிக்கை!

பூஷனின் வழக்கறிஞர் ராஜீவ் தவான், ‘ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்படும்போது அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப்படக் கூடாது’ என்றார். 

ஹைலைட்ஸ்

  • பிரசாந்த் பூஷன் மீது 2009ல் ஒரு அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது
  • அந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது
  • அந்த வழக்கு 'அரசியலமைப்பு அமர்வுக்கு' கீழ் விசாரிக்க கோரிக்கை
New Delhi:

பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மீது 2009 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குறித்து விசாரிக்க புதிய நீதிமன்ற அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டேவிடம் கோரிக்கை வைத்துள்ளது. 

இந்த வழக்கானது, வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வேறொரு நீதிமன்ற அமர்வின் கீழ் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

இது குறித்து நீதிபதி அருண் மிஸ்ரா, “எனக்கு அவ்வளவு நேரம் இல்லை. நான் விரைவில் ஓய்வு பெறுகிறேன். இந்த வழக்கானது 4 அல்லது 5 மணி நேர விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்றார். 

நீதிமன்றம் மேலும், “இது விசாரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்தான வழக்கு அல்ல. நீதிமன்ற நிர்வாகத்தின் மீதிருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தது இந்த வழக்கு. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வரும்போது, அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டால் பிரச்னை ஏற்படும்” என்றது. 

அதே வேளையில் பிரசாந்த் பூஷனின் வழக்கறிஞர் ராஜீவ் தவான், “நீதிபதிகளின் சீர்கேடு பற்றி வரும் கருத்துகள், அவமதிப்போ இல்லையோ, அவை அனைத்தும் அரசியலமைப்பு அமர்வுக்குக் கீழ் விசாரிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

Newsbeep

பிரசார்ந்த பூஷனின் அவமதிப்பு வழக்கு குறித்தான கடந்த விசாரணையின்போது, நீதிமன்றம், ‘எந்த வகையில் நீதிமன்ற சீர்கேடு குறித்து குற்றம் சாட்டலாம் என்பது குறித்து ஆராயப்படும்' என்று தெரிவித்திருந்தது. 

2009 ஆம் ஆண்டு, தெகல்கா இதழுக்காக பிரசாந்த் பூஷன் அளித்தப் பேட்டியில், ‘இதுவரை பதவியிலிருந்த 16 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பாதிபேர் ஊழல்வாதிகள்தான்' என்று கூறியிருந்தார். இதற்குத்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. 

இதைக் கருத்தில் கொண்டுதான் நீதிபதி அருண் மிஸ்ரா,  ‘இந்த அவமதிப்பு வழக்கு விசாரணையை  நாங்கள் முடிக்க விரும்புகிறோம். ஆனால் நமக்கு முன்னர் சில அடிப்படை கேள்விகள் உள்ளன. 1) நீங்கள் நீதிமன்ற அமைப்பு பற்றி ஊடகத்திடம் பேச விரும்புகிறீர்களா; 2) அப்படியென்றால், நீதிபதிகள் மீது உங்களுக்கு அதிருப்தி இருந்தால், அது குறித்து எப்படி கருத்து தெரிவிக்கலாம்; 3) அப்படி சொல்லப்படும் எந்தக் கருத்து அவமதிப்பாக கருத முடியும்' என்று கேள்விகளை அடுக்கினார். 

பூஷனின் வழக்கறிஞர் ராஜீவ் தவான், ‘ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்படும்போது அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப்படக் கூடாது' என்றார்.