This Article is From Dec 12, 2019

’உங்கள் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது’: அசாமுக்கு உறுதியளித்த மோடி!

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிய நிலையில் அசாம் மற்றும் அண்டை மாநிலமான திரிபுரா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பதற்றமடைந்துள்ளன.

’உங்கள் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது’: அசாமுக்கு உறுதியளித்த மோடி!
New Delhi:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அசாம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அங்கும் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாகின. 

இதனிடையே, குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகாலாந்து, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கவுஹாத்தி, திஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளின் சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்

மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அசாம் மாநிலமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதைத்தொடர்ந்து, போராட்டத்தை அடக்க திரிபுரா மற்றும் அசாமில் இராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

அசாமில் தீவிர போராட்டம் நடந்துவரும் நிலையில் அங்கு நேற்று இரவு 7 மணி முதல் 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தால் தங்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவிக்கும் மாணவர்கள், இந்த மசோதா திரும்பப் பெறப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 


இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, பிரிவின் 6-ன்படி, அசாம் மக்களின் அரசியல், மொழியியல், கலாச்சாரம் மற்றும் நில உரிமைகளை அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்க மத்திய அரசும், நானும் முற்றிலும் கடமைப்பட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார். 

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிய நிலையில் அசாம் மற்றும் அண்டை மாநிலமான திரிபுரா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பதற்றமடைந்துள்ளன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அமைப்பும் வன்முறையில் ஈடுட்டதால் பதற்றம் 

அசாமின் மிகப்பெரிய நகரமும் போராட்டங்களின் மையப்பகுதியுமான கவுஹாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. 

மாவட்டத்தில் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி ஆகியோரின் வீடுகளை போராட்டக்காரர்கள் குறிவைத்ததால் ஊரடங்கு உத்தரவு பின்னர் நீட்டிக்கப்பட்டது.

.