This Article is From Nov 28, 2019

பிரதமர் மோடி எவ்வளவு சிக்கனமா இருக்கிறார் தெரியுமா...? அவரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் -அமித் ஷா

சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்தம்) மசோதா, 2019தொடர்பான விவாதத்திற்கு அமித் ஷா அளித்த பதில் அளித்தபோது, எஸ்.பி.ஜியின் பாதுகாப்பு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. காந்தி குடும்பத்தினர் பல சந்தர்ப்பங்களில் அதை மீறியுள்ளனர். ஆனால், பிரதம மோடி கடந்த 20 ஆண்டுகளாக மாநில பாதுகாப்பு, பாதுகாப்பு குறித்த நீல புத்தகத்தையும் அவர் மீறவில்லை.

பிரதமர் மோடி எவ்வளவு சிக்கனமா இருக்கிறார் தெரியுமா...? அவரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் -அமித் ஷா

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டு பயணம் செல்வது குறித்து விமர்சனம் எழுந்தது.

New Delhi:

வெளிநாடுகளுக்கு செல்லும்போது பிரதமர் மோடி ஹோட்டல்களைத் தவிர்த்து விமான நிலையங்களிலையே தங்குகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள்ளார். பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை செலவுக் குறைப்புக்குதான் முன்னுரிமை கொடுக்கிறார். வெளிநாட்டு வருகையின்போது தொழில்நுட்ப நிறுத்தங்களின் போது பிரதமர் சொகுசான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை விடுத்து விமான நிலையத்தின் ஓய்வறைகளிலேயே ஓய்வெடுக்கவும் குளிக்கவும் செய்கிறார் என்று அமித் ஷா தெரிவித்தார். 

“பிரதமர் மோடி தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் பிரதமர் மோடி மிகவும் ஒழுக்கமான ஆட்சியை பின்பற்றுகிறார். உதாரணமாக பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு செல்லும் போதெல்லாம், அவர் 20 சதவீதத்துக்கும் குறைவான ஊழியர்களை தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அதேபோல் உத்தியோகப்பூர்வ தூதுக்குழுவைப் பொறுத்தவரை அதிகாரிகள் தனி கார்களைப் பயன்படுத்தினர் தற்போது அவர்கள் பேருந்தினையோ அல்லது பெரிய வாகனத்தையோ பயன்படுத்துகிறார்கள். 

சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்தம்) மசோதா, 2019தொடர்பான விவாதத்திற்கு அமித் ஷா அளித்த பதில் அளித்தபோது, எஸ்.பி.ஜியின் பாதுகாப்பு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. காந்தி குடும்பத்தினர் பல சந்தர்ப்பங்களில் அதை மீறியுள்ளனர். ஆனால், பிரதம மோடி கடந்த 20 ஆண்டுகளாக மாநில பாதுகாப்பு, பாதுகாப்பு குறித்த நீல புத்தகத்தையும் அவர் மீறவில்லை. 

“சிலருக்கு, பாதுகாப்பு என்பது அடையாளமாக இருந்து வருகிறது. சிலருக்கு, பாதுகாப்பு என்பது ஒரு சிறிய பிரச்சினையாக மாறிவிட்டது. பாதுகாப்பு விதிமுறைகள் விருப்பத்திற்காக மீறுகின்றனர். ஆனால், பாதுகாப்பு விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் கடைபிடிக்கும் மோடிஜியின் முன் மாதிரியைப் பின்பற்றுவோம் என்று உள்துறை அமைச்சர் கூறினார். 

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கவுரவ் கோகய் 2017ம் ஆண்டில் பிரதமர் மோடி எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீறியதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்த அமித் ஷா கடல்சார் விமானத்தை பரிசோதித்த பின்னர் எஸ்.பி.ஜி பணியாளர்கள் விமானத்திற்குள் நிறுத்தப்பட்டனர். இதுதவிர  பயணத்தின் நோக்கமே குஜராத்தில் மேம்படுத்துவது மட்டுமே. தனிப்பட்ட வேடிக்கையான பயணம் அல்ல என்று அவர் கூறினார். 

.