This Article is From May 21, 2020

ஆம்பன் புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயலுக்கு 72 பேர் உள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா,  கொல்கத்தா. மேற்கு மித்னாபூர், கிழக்கு மித்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆம்பன் புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி!

கொல்கத்தா விமான நிலையம் முழுவதையும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • மேற்கு வங்கம், ஒடிசாவை ஆம்பன் புயல் கடுமையாக தாக்கியுள்ளது
  • மேற்கு வங்கத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர்
  • நாளை புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்
New Delhi:

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை விமானம் மூலம் பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. புயலால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. 

 சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். மேலும், புயல் பாதிப்பை நேரில் வந்து பார்வையிடுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நாளை புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, 'மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் பாதித்த வீடியோ காட்சிகளை பார்த்தேன். இந்த துயரமான நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் மேற்கு வங்கத்திற்கு ஆதரவாக நிற்கிறது. புயலால் பாதித்தவர்கள் மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறேன். இயல்பு நிலைக்கு மேற்கு வங்கத்தை கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற தெரிவித்தார். 

மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயலுக்கு 72 பேர் உள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா,  கொல்கத்தா. மேற்கு மித்னாபூர், கிழக்கு மித்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்பன் புயல் சேத மதிப்புகளை கணக்கிட 3 முதல் 4 நாட்கள் ஆகலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 


 

.